ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றம்: இந்தியா தடுக்க வேண்டுமென த.தே.ம.முன்னணி கோரிக்கை

Sri Lanka Army Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Kajinthan Feb 21, 2026 06:28 AM GMT
Report

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்த இந்திய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியது.

இது தொடர்பில், நேற்று(20.02.2026) கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மீண்டும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையா..! சபையில் அரசாங்கத்திற்கு பகிரங்க வலியுறுத்தல்

மீண்டும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையா..! சபையில் அரசாங்கத்திற்கு பகிரங்க வலியுறுத்தல்

இந்த சந்திப்பில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் (கொன்சூலர் ஜெனரல்) சாய் முரளி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பிரசாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன் மத்தியகுழு உறுப்பினர் தீபன்திலீசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இதன்போது, அநுர அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கொண்டுவரவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு தொடர்பிலும் மற்றும் இந்த அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள், ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கியதான ஜனநாயக விரோத போக்குகள் குறித்தும் இந்திய தூதரக பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றம்: இந்தியா தடுக்க வேண்டுமென த.தே.ம.முன்னணி கோரிக்கை | Indian Deputy High Commissioner To Sri Lanka

இனப் பிரச்சினைக்கு தீர்வு என்னும் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அநுர அரசாங்கம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2015 - 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கியராஜய’ அரசியலமைப்பு வரைபையை அரசியலமைப்பாக கொண்டு வருவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்த வரைபானது இதுவரை இருந்து வருகின்ற அரசியலமைப்பில் உள்ளதைப் போன்ற ஒற்றையாட்சி முறையாகும். அந்த வரைவு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானதாகும்.

திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பில் இழுபறி! கொழும்பு பேச்சுவார்த்தையில் பின்னடைவு

திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பில் இழுபறி! கொழும்பு பேச்சுவார்த்தையில் பின்னடைவு

இவ்வாறான தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் புறக்கணிக்கும் அரசியலமைப்பை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வு எட்டும் வகையில் ‘சமஸ்டி’ அரசியலமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும்.

அதன் மூலமே தமிழ் பகுதிகளில் பௌத்த சிங்கள மயமாக்கல், ஆக்கிரமிப்புக்கள், இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்க முடியும் என்றும் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனவாதத்தின் வெளிபாடே கிவுல் ஓயா திட்டம்

இந்நிலையில், அநுர அரசின் ஆட்சியிலும் தமிழர் தாயகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பௌத்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த இந்திய அரசு இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிரால் வலியுறுத்தப்பட்டது.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றம்: இந்தியா தடுக்க வேண்டுமென த.தே.ம.முன்னணி கோரிக்கை | Indian Deputy High Commissioner To Sri Lanka

குறிப்பாக ‘கிவுல் ஓயா’ திட்டம் தமிழர் தாயகத்தின் இன பரம்பலை மாற்றியமைக்கும் குறிக்கோளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த 1985 ஆம் ஆண்டில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்குப் பிராந்தியங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களை மீளக்கூடியமர அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒற்றையாட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளி மாகாணங்களை சேர்ந்த சிங்கள மக்களை சட்டவிரோதமாக குடியேற்றினார்கள்.

அவ்வாறு சட்ட விரோதமாக குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயத்திற்கான மேலதிகமான நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கே இந்த திட்டம் 2013-ல் ராஜபக்சாக்களால் ஆரம்பிக்கப்பட்டது.

மகிந்த ஆட்சியில் பாதாள உலகக்குழு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரபல அரசியல்வாதிகள்

மகிந்த ஆட்சியில் பாதாள உலகக்குழு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரபல அரசியல்வாதிகள்

இதே திட்டத்திற்கே 2026ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2000 கோடி நிதியை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்ததுடன், கடந்த ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் விரோத இனவாத திட்டத்தையே இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனப்பரம்பலை ஊக்குவிக்கும் வகையில் நீதி ஒதுக்கீடு

மேலும், சிறிலங்கா பொருளாதாரத்தில் விழுந்திருக்கும் தற்போதைய சூழலில், நாடு பொருளாதார ரீதியாக மீண்டெழுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவிலேயே முழுவதுமாக தங்கியுள்ளது.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றம்: இந்தியா தடுக்க வேண்டுமென த.தே.ம.முன்னணி கோரிக்கை | Indian Deputy High Commissioner To Sri Lanka

அதிலும் குறிப்பாக இந்தியாவின் ஆதரவை நாடி நிற்கின்றது. இவ்வாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச தரப்புக்களது உதவிகளை பெற்று பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடும்.

அதேவேளை, தனது திறைசேரி மூலம் நிதி ஒதுக்கீடுகளை செய்து சிங்கள பௌத்தமயமாக்கலையும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளையும் தமிழர் தேசத்தின் இருப்புக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றது.

தமிழர் பகுதியில் நடக்கும் அரசின் அட்டகாசங்கள்

கடந்து வந்த அரசாங்கங்கள் செய்த அதே இனவாத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் செய்து வருகிறது. ‘கிவுல் ஓயா’ திட்டம் தமிழர்களின் இருப்புக்கு எதிரானது என்ற வகையில் இந்திய அரசு தலையீடு செய்து இத்திட்டத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற விடயமும் முன்னணியினரால் வலியுறுத்தப்பட்டது.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றம்: இந்தியா தடுக்க வேண்டுமென த.தே.ம.முன்னணி கோரிக்கை | Indian Deputy High Commissioner To Sri Lanka

அத்துடன், ‘பிரஜா சக்தி’ என்கின்ற திட்டம் ஊடாக கட்சி உறுப்பினர்களை நியமித்து அதிகாரத்தை வழங்கி அரச நிர்வாக கட்டமைப்பை கேலிக்குள்ளாக்கும் செயற்பாடு, வுலிகாமம் வடக்கில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் விடுவிக்கப்படல் வேண்டுமென மக்கள் கோரிவரும் நிலையில் இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் பல நடந்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை.

அதே போன்று, பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளையும் அரசாங்கம் தாமதப்படுத்தி வருகின்ற தற்போதைய சூழலில், அந்த அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த இந்தியா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening

மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US