இலங்கை சீனாவுடன் மீண்டும் சேர்ந்து விடும் என இந்தியா அச்சம்
சீனாவினுடைய வருகை மற்றும் சீனாவினுடைய நடமாட்டம் குறித்து கடற்றொழிலாளர்கள் ஆகிய நாங்கள் பல தடவைகள் இந்தியாவிற்கு நாங்கள் தெரியப்படுத்தி இருக்கின்றோம் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான வருகை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றையதினம் (02.09.2023) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா பாதுகாப்பு அமைச்சர் வருகை
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தேசியக்கொடியுடன் சீனக் கப்பல்கள் மற்றும் தாய்வான் கப்பல்கள் பல வருடங்களுக்கு முன்னர் இங்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது, அதையும் நாங்கள் தெரியப்படுத்தி இருந்தோம்.

இன்று மெது மெதுவாக வளர்ந்து அவர்களுடைய ஆய்வுக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் இங்கே வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கை அரசாங்கமும் அவர்களிடம் கூடுதலான கடனைப் பெற்று கடன் சுமையோடு இருப்பதனால், சீனாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர்களது கேட்பதற்கு எல்லாம் இணங்கி கொடுப்பதனால் இலங்கை - சீனவின் பக்கம் திரும்பி விடுமோ என்ற ஒரு அச்சத்திலே அல்லது சீனாவுடன் சேர்ந்து தமக்கு எதிரியாகி விடுமோ என்ற அச்சத்திலே தான் இந்தியாவில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் வருகின்றார் என்பதை தான் நாங்கள் உணர்கின்றோம்.
எனவே அவருடைய இந்த விஜயமானது கண்டிப்பாக இடம்பெறும் எனத் தான் நான் எதிர்பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri