ஆட்ட நிர்ணய சதியில் சிக்கிய இந்திய கிரிக்கட் அணி முகாமையாளர்கள்
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் அணி முகாமையாளர்கள் இருவருக்கு நாட்டை விட்டும் வெளியேற தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் லெஜண்ட் கிரிக்கெட் கிண்ணம் - 2024 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
குறித்த போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி முகாமையாளர்கள் இருவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாகவும், போட்டிகளை விட்டுக்கொடுக்குமாறு விளையாட்டு வீரர்களை நிர்ப்பந்தம் செய்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
விசேட விசாரணை
இந்நிலையில் விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது.
அதன் போது குறித்த இரண்டு முகாமையாளர்களும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து, கொழு்ம்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
