இந்திய வெளியுறவு அமைச்சகம் இலங்கை விடயத்தில் தோல்வி கண்டுள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கையை அண்மித்த கடலில் இந்திய (India) கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளியுறவு அமைச்சகம் தவறிவிட்டது என்று தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
காங்கிரஸின் தமிழக குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2014ஆம் ஆண்டில், ஆட்சிக்கு வந்தபோது, கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என பாரதிய ஜனதா கட்சி, உறுதியளித்தது.
தொடரும் கைதுகள்
இருந்த போதிலும், இலங்கை கடற்படையினரின் நடுக்கடல் தாக்குதல்கள் மற்றும் கைதுகள் இன்றுவரை தொடர்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இருந்து கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தோல்வி அடைந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |