இலங்கையில் பிரமாண்டமான திருமண நிகழ்வை நடத்தும் இந்திய கோடீஸ்வரர்
பிரபல இந்தியத் தொழிலதிபர் மோகன் சுரேஷின் மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு இந்த ஆடம்பர திருமணம் ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக கருதப்படுகின்றது.
அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி பென்டோட்டா பிரதேசத்தில் உள்ள சினமன் பென்டோட்டா ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆடம்பர திருமணம்
இந்த திருமண நிகழ்வில் 300 இந்திய விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திருமணத்தின் மூலம் இலங்கைக்கு சுமார் 35 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தனித்துவமான மற்றும் ஆடம்பரமான திருமணங்களை நடத்த ஏற்ற இடமாக உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னிலைப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam