இந்திய வணிகக் குழுக்கள் இலங்கை வருகை: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
சிலோன் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு வணிகக் குழுக்கள் கலந்து கொண்டதுடன் சுகாதாரம் மற்றும் மருந்துகள், சூரிய ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் காலணி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய CII குழு, இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் சந்திப்புகளை நடத்தியது.
2026 அக்டோபர் 12 - 13 திகதிகளில் சிலோன் வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ப இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு வணிகக் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
இதன்போது இலங்கையில் உள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும், வணிகங்களுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்தவும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைய சுகாதாரம் மற்றும் மருந்துகள், சூரிய ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் காலணி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய CII குழு, இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியது.

வர்த்தகச் சூழல்கள் மற்றும் சாத்தியமான வணிக ஒத்துழைப்பு
இதில் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க, மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB) உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இரு தரப்புக்கும் ஆர்வமுள்ள துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தகச் சூழல்கள் மற்றும் சாத்தியமான வணிக ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதேவேளை சுகாதாரம், தளவாடங்கள் (logistics) கட்டுமானப் பொருட்கள், வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனக் குழுவும் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டது.
இதனை தொடர்ந்து சாத்தியமான வணிகக் கூட்டணிகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய, இலங்கையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் வணிகங்களுக்கு இடையிலான (B2B) சந்திப்புகளையும் நடத்தியதுடன் இலங்கையில் உள்ள தொழில் செயல்பாடுகளை நேரில் புரிந்துகொள்ளும் நோக்கில், நெஸ்லே மற்றும் எலிஃபண்ட் ஹவுஸ் ஆகியவற்றின் உற்பத்தி நிலையங்களுக்கு இக்குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

மேலும், இந்த இரண்டு குழுக்களும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களைச் சந்தித்துப் பேசிய இந்த உரையாடல்களின் போது, இலங்கை பொருளாதாரம் குறித்தும், இலங்கையில் இந்திய வணிகங்களுக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
வருகை தந்த நிறுவனங்கள், இலங்கையிலுள்ள தங்கள் வணிக இணையர்களுடன் உறவை ஆழப்படுத்தவும், வணிகக் கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் அவர் ஊக்குவித்தார். கொச்சி வர்த்தக சபையின் தூதுக்குழுவின் இந்த வருகையானது, பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டங்களில் இலங்கையுடனான பொருளாதார மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இலங்கை வருகை
இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிராந்திய வர்த்தக சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கும், இலங்கையிலுள்ள அவற்றின் இணையர்களுக்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் இது முன்னெடுக்கப்படுகிறது. இந்தச் சூழலில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், தெற்கு குஜராத் வர்த்தக மற்றும் தொழில் சபை மற்றும் இந்திய வர்த்தக சபையின் தமிழ்நாடு மாநில கவுன்சில் ஆகியவற்றின் வணிகக் குழுக்களும் இலங்கைக்கு வருகை தந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு 2026' நிகழ்வின் ஒரு பகுதியாக, கேரளா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் வணிக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சபையும் சிலோன் வர்த்தக சபையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தில், கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சபையின் முன்னாள் தலைவரும் செயற்குழு உறுப்பினருமான சி.எஸ்.கார்த்தா மற்றும் சிலோன் வர்த்தக சபையின் தலைவர் திரு. கிரிஷன் பாலேந்திரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தமானது, வணிக உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நெருக்கமான வணிகத் தொடர்புகளை வளர்ப்பதையும், இரு தரப்புக்கும் பயனளிக்கக்கூடிய வணிக வாய்ப்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இரு தூதுக்குழுக்களின் வருகைகளும், வணிகங்களுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டணிகளை வலுப்படுத்துவதன் மூலம், இந்தியா-இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளை உறுதிப்படுத்துகின்றன.

