அமெரிக்காவில் இந்திய இளைஞரொருவர் மரணம்! வெளியான காரணம்
அமெரிக்காவில் கடலில் மூழ்கி இந்திய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானாவின் ராஜண்ணா - சர்கில்லா மாவட்டத்தின் வெமுலவாடா பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஐதராபாத்தில் பி.டெக் படித்த பின்பு, கடந்த டிசம்பரில் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவின் மேற்கு புளோரிடாவுக்கு சென்றுள்ளார்.

உயிரிழந்தமைக்கான காரணம்
இதன்போது நண்பர்களுடன் வாடகைக்கு படகு ஒன்றை எடுத்து கொண்டு மேற்கு புளோரிடாவின் கிராப் தீவுக்கு சென்ற போது நடுக்கடலில் படகில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதுடன், நண்பர்களுடன் சேர்ந்து படகை சரி செய்ய நடுக்கடலில் குதித்துள்ளார். கடலில் நீரோட்டம் வலிமையாக இருந்தமையினால் காணாமல்போயுள்ளார்.
இந்நிலையில், அந்த வழியே வந்த ஒக்கலூசா கவுன்டி ஷெரீப் அலுவலக படகு ஒன்று தேடுதல் பணியில் 4 நண்பர்களை மீட்டுள்ளதுடன், யஷ்வந்த் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கடலோர காவல் படையினர் பல மணிநேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், காணாமல்போன யஷ்வந்த் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam