லண்டனில் இந்திய வம்சாவளி சிறுவனொருவர் பரிதாபமாக பலி
லண்டன் - வேல்ஸில் உள்ள டாஃப் ஆற்றில் மூழ்கி 13 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவனொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று கார்டிஃபில் உள்ள டாஃப் ஆற்றில் இந்திய வம்சாவளி சிறுவன் ஆர்யன் கோனியா காணாமல்போயுள்ளார்.
இதனையடுத்து உள்ளூர் காவல்துறை, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கடலோர காவல்படை மற்றும் காவல்துறை ஹெலிகொப்டர் மூலம் விரிவான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சிறுவன் ஆர்யன் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அவசர மருத்துவ சேவைகளால் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை என்றும், சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதாகவும் தெற்கு வேல்ஸ் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
உடற்கூராய்வு விசாரணை ஆரம்பம்
ஆர்யன் மரணம் தொடர்பில் உடற்கூராய்வு அலுவலகம் விசாரணை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ஜிதேந்திரா மற்றும் ஹினா கோனியாவின் அன்பு மகனும் நவியா கோனியாவின் சகோதரனுமான ஆர்யன் கோனியாவின் இழப்பால் மொத்த குடும்பமும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri