வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தவருக்கு அதிர்ச்சி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவினால் நேற்று மாலை 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
49 வயதான இந்தியர் இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக டுபாயிற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
வெளிநாட்டு நாணயங்கள்
அவர் இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து டுபாய்க்கு விமானத்தில் ஏற விமான நிலையத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்குள் பணம் மற்றும் தங்க நகைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இந்திய பிரஜையிடம் 45 மில்லியன் ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள 1,500 கிராம் தங்கம், 30 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 103,700 அமெரிக்க டொலர்கள், 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 688,000 சவுதி ரியால், 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 335,000 திர்ஹாம்கள் மற்றும் 7 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 21,500 யூரோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
