பஹல்காம் தாக்குதல்தாரிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த இந்திய இராணுவம்
இந்தியா - காஷ்மீரில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பஹல்காம் தாக்குதலை மேற்கொண்ட ஆயுதக் குழுக்களின் மறைவிடத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த இடத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு முழுவதும், இந்திய மற்றும் பாகிஸ்தான் துருப்புக்கள் சிறிய ரக ஆயுதத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
175 பேர் கைது
இந்நிலையில் பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்களை கண்டுப்பிடிப்பதற்கான, இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப இந்திய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் 175 பேரை கைது செய்ததாகவும், பல துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய "பயங்கரவாத மறைவிடத்தையும்" கண்டுபிடித்ததாகவும் இந்திய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்
இந்நிலையில் பஹல்காமில் நடந்த கொடூரமான கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான இராஜதந்திர பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.
இதற்கமைய, ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கிராமமான ஆர்.எஸ்.புராவில் வசிக்கும் இந்தியர்கள் இன்று சமூக பதுங்கு குழிகளை சுத்தம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடந்தால் பாதுகாப்பு தொடர்பில் எங்களை தயார்படுத்திக் கொள்ள குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
