இந்திய இராணுவத்தினரின் வருகை தொடர்பில் இணைய ஊடகங்களில் வெளியான செய்தி! இலங்கை வெளியிட்டுள்ள விடயம்
இந்திய இராணுவம் இலங்கைக்குள் வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பொய்யான செய்தியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படம் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய - இலங்கை படையினரின் நட்பு சக்தி கூட்டுப் பயிற்சி தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படம் என்பது கணடறியப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரும் பங்கேற்கும் தொடர் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியா இராணுவ அணி ஒன்று இலங்கை மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளது எனவும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பல்வேறு நோக்கங்ளை கொண்ட இந்த பொய்யான செய்திகள் குறித்து மக்கள் குழப்பமடைய கூடாது. ஒழுக்கமான ஊடக செய்தியளிப்பு தொடர்பில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி எந்த நிலைமையானாலும் அதனை எதிர்கொள்ள இலங்கையின் முப்படையினர் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.
You My Like This Video



