பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா
பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனி, அக்னூர் பகுதிக்கு எதிரே உள்ள பயங்கரவாத ஏவுதளமே, இவ்வாறு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி
தாக்குதலுக்கு முன்னர், தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது,
BSF NEUTRALISES Terror Camp & Pakistan Army Launchpads in Sialkot 🚨
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) May 10, 2025
Pakistan will be BURRIED down. They've begun it, WE WILL END🇮🇳#IndiaPakistanWarpic.twitter.com/l7BXQ3VabR
ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய 'ஒப்பரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வரும் நிலையில் இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக, டெல்லியை நோக்கி வந்த பாகிஸ்தானின் FATAH 1 நெடுந்தூர ஏவுகணையை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |