சர்வதேச செம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்த இந்திய அணி
மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கிரிக்கட் செம்பியன்ஸ் கிண்ணப்போட்டித் தொடர்பில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி, கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இலங்கையின் கட்டுநாயக்க முதலீட்டு வலய மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று இடம்பெற்றது.
இந்திய அணி
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 4 விக்கட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது.
இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யோகேந்திர படோரியா 40 பந்துகளில் 73 ஓட்டங்களை பெற்றார் எனினும் இங்கிலாந்து அணி 118 ஓட்டங்களுக்கு அனைத்து விட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
முன்னதாக இந்திய அணி, தமது ஆறு குழு ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்று நான்கு அணிகள் கொண்ட அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது.
இந்தப்போட்டித் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் பங்கேற்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |