இலங்கை தமிழருக்கு எதிராக இந்திய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்தியாவில் சிறைத்தண்டனையின் பின்னரான நாடுகடத்தலை தடுக்குமாறு இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை தங்க வைக்கக்கூடிய சரணாலயம் இந்தியா அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
“உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாம் ஏற்கனவே 140 கோடி மக்கள் தொகையுடன் போராடி வருகிறோம்.
இந்தியா எல்லா இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டவர்களை மகிழ்விக்கக்கூடிய ஒரு சத்திரம் அல்ல” என நீதியரசர்களான தீபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மனு நிராகரிப்பு
இந்தியாவில் சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கை தமிழர் ஒருவர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாடுகடத்தலில் இருந்து பாதுகாப்பு கோரியிருந்தார்.
எனினும் வேறு ஏதாவது நாட்டிற்கு செல்லுங்கள் என அறிவுறுத்திய நீதியரசர்கள், இலங்கையரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட இலங்கையர் 7 ஆண்டு சிறைத்தண்டனையை முடித்தவுடன் உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இலங்கை அகதி
இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என நீதியரசர்கள் வினவிய போது, மனுவாதி ஒரு அகதி எனவும் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கனவே இந்தியாவில் குடியேறிவிட்டனர் எனவும் இலங்கையர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மனுவை நிராகரித்த நீதியரசர்கள், இந்தியாவில் குடியேறுவதற்கான அடிப்படை உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
