கிழக்கு மாகாண வளர்ச்சி தொடர்பில் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கிழக்கு மாகாண வளர்ச்சியில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பதில் உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், கொழும்பில் இன்று இலங்கையின் கிராமப்புற அபிவிருத்திதுறை ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுடன் நடத்திய சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்துக்கு இந்தியாவிலிருந்து முதலீடுகள் பெறுவதற்கான வாய்ப்புகள் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு மேற்கொள்ளக்கூடிய கூட்டு முயற்சிகள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது விவாதித்தனர்.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு கூட்டாண்மை குறித்தும், குறிப்பாக கிழக்கு மாகாணம் தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இதேவேளை, இந்தியா ஏற்கனவே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு இடையே ரயில் பேரூந்து அலகுகளை வழங்கும் ஒரு முழு மானிய நிதியுதவி திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri