இஸ்ரேலின் டெல் அவிவ்வுக்கான விமானங்களை நிறுத்திய இந்திய விமான நிறுவனம்
இஸ்ரேலின் டெல் அவிவ்வுக்கான(Tel Aviv) விமானங்களை மே 6ஆம் திகதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்
இதன்படி டெல் அவிவ்வுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் தமது விமானச் சேவைகள், 2025, மே 6, வரை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பை ஏர் இந்தியா விடுத்துள்ளது.
இன்று காலை யேமனின் ஹவுதி தீவிரவாதிகளால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் பென் கூரியன் விமான நிலையப்பகுதியில் வீழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியதில் 8 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |