இலங்கையில் இந்தியா! யாழ்ப்பாணத்தில் கலப்பு மின்சார திட்டங்கள்- உடன்படிக்கைகள் கைச்சாத்து! (photos)
யாழ்ப்பாணத்தில் கலப்பு மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.
ஏற்கனவே இந்த திட்டம் சீனாவிடம் இது வழங்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் முதலில் சீனாவின் MS/Sinosar–Etechwin கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்டது,
எனினும் இந்தியா எழுப்பிய ஆட்சேபனைகளைத் தொடர்ந்து அந்த திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்திற்கு அப்பால் மூன்று தீவுகளில் கலப்பின மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகள், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்தியாவின் மானிய உதவியுடன் இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயற்;படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்ட மென்பொருளுடன் கூடிய நவீன கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் பலகைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் வெளிநாட்டு சேவை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் தொடர்பி;ல் சுஸ்மா ஸ்வராஜ் நிறுவகத்துக்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட்டுள்ளன.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan