இந்தியாவுடன் இலங்கை செய்துக்கொள்ளும் மேலும் ஒரு உடன்படிக்கை!
இந்தியாவின் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தேவையான நிதி உதவியை வழங்க இந்திய இணக்கம் வெளியிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபயவினால் இது தொடர்பான யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஒஃப் இந்தியா நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்படவுள்ளது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஒஃப் இந்தியா என்பது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு நிறுவனமாகும்,
இது முதன்மையாக தரை மற்றும் விண்வெளி பயன்பாடுகளுக்கான மேம்பட்ட மின்னணு தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுனமாகும்