இந்தியா - இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து முக்கிய கலந்துரையாடல்
எதிர்வரும் ஏப்ரலில் இந்தியா - இலங்கை இடையே நடைபெறும் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடற்றொழிலாளர்கள்; மற்றும் அவர்களின் பொருளாதாரம் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடல் எல்லையை அடையாளம் காணும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜிபிஎஸ் கருவிகளை அரசு வழங்கியுள்ளதாக முருகன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைப் பயணத்தின் போதும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து
எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளுக்கு இடையே செயலாளர்கள்
அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.