பிரபாகரனை பிடிக்க விரைந்த இந்திய படை: இலங்கை அரசாங்கத்தின் மறைமுக நகர்வு(Video)
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது இராணுவ நடவடிக்கைகளை 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இந்தியா ஆரம்பித்திருந்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அக்கால அரசியல் ஆய்வாளர்களும், போரியல் வல்லுனர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் குறித்த இராணுவ நடவடிக்கையானது 22 ஆண்டுகளையும் கடந்து முள்ளிவாய்க்கால் வரை தொடரப்போகின்றது என விடுதலைப்புலிகளின் தலைவர்களோ அல்லது இந்திய அரசியல் இராணுவ தலைமைகளோ கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்கள்.
இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடனோ அல்லது உயிர் இன்றி பிணமாகவோ பிடிப்பவருக்கு 1 மில்லியன் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன அறிவித்திருந்தார்.
மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிப்பதற்கு இந்திய இராணுவம் இரகசிய நகர்வொன்றை மேற்கொண்டிருந்ததாக கூறப்பட்ட செய்தி அத்தருணத்தில் தாயகத்தில் பெரும் கலக்கத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியிருந்தது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
