இந்தியா - இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் அமைச்சர் கூறிய முக்கிய தகவல்(Photos)
இந்தியாவிற்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான சாத்திய கூறுகள் தற்பொழுது காணப்படவில்லை என விமானச் சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா காங்கேசன் துறையில் வைத்து தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை ரேமினல் கப்பல் சேவையை இன்றைய தினம் (16.06.2023) அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா வைபவ ரீதியாகத் திறந்துவைத்துள்ளார்.
இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கப்பல் சேவை
மேலு் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது காங்கேசன்துறையில் பயணிகள் ரேமினல் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தியா மற்றும் காங்கேசன் துறைமுகத்துக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அது எவ்வளவு காலத்தில் முடியும் என தற்பொழுது கூறமுடியாது. அது இந்த வருடக் கடைசியாக இருக்கலாம் அல்லது அடுத்த வருடமாக இருக்கலாம்.

ஆனால் வேலைகள் முடிவற்ற பின்னர் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்து நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri