இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மிகக்குறுகிய காலத்துக்குள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரியுள்ளது.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த கோரிக்கையை இலங்கையின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் இந்தியாவின் சார்பில், அந்த நாட்டின் இந்து சமுத்திர பிராந்தியங்களுக்கான இணைச் செயலாளர் பூனீட் அகர்வால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் பங்கேற்றனர்.
பயணிகள் கப்பல் சேவை
இந்த கோரிக்கையின்படி காங்கேசன்துறைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் இன்னும் திகதி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் காங்கேசன்துறைக்கும், தனுஸ்கோடி மற்றும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலும் பயணிகள் கப்பல் சேவைகளை நடத்துவது பொருத்தமானது என்று இந்திய அதிகாரியான அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மத்தளை வானூதி நிலையத்துக்கான வானூர்தி சேவைகளை மேற்கொள்வதற்கான
கோரிக்கையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்தபோது, அதற்கு இந்தியா
உதவும் என்று அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
