இந்திய நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ள பிரதமர்
நெருக்கடியான நேரத்தில் இலங்கையின் மிகப்பெரிய நண்பனாக இந்தியா பார்க்கப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இந்திய நிறுவனங்களை முதலீடு செய்யுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய அரச உதவிகள்
குறித்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் நரேந்திர மோடியின் அண்டை நாடுகளின் முதல் கொள்கையின் கீழ் இந்தியாவிற்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக அண்டை நாடுகளுக்கு நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்க இந்திய அரசாங்கமும், இந்திய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
இந்தியாவையும், இலங்கையையும் நாகரீக இரட்டையர்கள் என்று குறிப்பிட்ட
உயர்ஸ்தானிகர், இரண்டு அரசாங்கங்களும் மக்களை ஊக்குவிப்பதற்காகவும், வணிக உறவுகளை மேம்படுத்துவதாகவும் கடமையாற்றுகின்றன என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
