கச்சத்தீவை குத்தகைக்கு எடுப்பது தொடர்பில் இருநாடுகளும் கலந்துபேசி முடிவெடுக்கவேண்டும்: இராதாகிருஷ்ணன்
கச்சத்தீவை குத்தகைக்கு எடுக்கும் விவகாரத்தில் இந்தியா, இலங்கை என இருநாடுகளும் கலந்துபேசி முடிவெடுத்தால் சாலசிறந்ததாக இருக்கும் என கருதுவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள பெரம்பலூர் பகுதிக்கு நேற்றையதினம் சென்றிருந்த அவர் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா, இலங்கை இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
கச்சத்தீவு குத்தகைக்கு எடுக்கும் நடவடிக்கை ஒருசாரார் சார்பாக இருந்தால் பிழையாக கருதுகிறோம். இருசாராரும் கலந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தால் சாலசிறந்ததாகும்.
மேலும் இன்றைய சூழலில் இந்தியாதான் அதிமான உதவிகளை செய்கின்ற நாடாக கருதுகிறோம். இந்தியா இலங்கைக்கு மிக அத்தியாவசியமாக இருக்கிறது. இந்தியாவை ஒருபோதும் நாங்கள் மறக்க முடியாது.
இலங்கைக்கு உதவிகளை செய்துவரும் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் இருவரையும் பாராட்டுகிறோம்.
பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வரவில்லை. குறிப்பிட்ட கட்சியின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அண்ணாமலையின் விஜயம் குறித்து மோடிக்கு விளக்கியிருப்பார் என நம்புவதாக” தெரிவித்துள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
