உளவுத்துறை தகவல்களை பகிந்துகொள்வது தொடர்பில் இந்தியா - இலங்கைக்கு இடையில் உடன்பாடு!
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் நிகழ்நேர உளவுத்துறை தகவல்களை பகிந்துகொள்ளவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இரு நாட்டு காவல்துறை தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற மெய்நிகர் கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் ஒரு அடையாளமாகும் என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதுக்குழுவிற்கு அந்நாட்டு புலனாய்வுப் பணிப்பாளரும், இலங்கை தூதுக்குழுவிற்கு பொலிஸ்மா அதிபரும் தலைமை தாங்கினார்.
இரு நாடுகளுக்கிடையேயான குறுகிய கடல் வழியைப் பயன்படுத்திக் கொள்ளும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
அத்துடன், நிகழ்நேர உளவுத்துறை தகவல் பகிர்வின் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே, உலகளாவிய பயங்கரவாத குழுக்கள் மற்றும் தப்பியோடியவர்கள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கூட்டாக செயல்படுவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் தற்போதுள்ள ஒத்துழைப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும் இந்த கலந்துரையாடலின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
