அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து இந்தியாவின் நிலைப்பாடு
அமெரிக்காவின் கூடுதல் கூடுதல் வரிகள் விதிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், புதுடில்லியை பாதுகாக்க வேண்டிய வழிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பதால், வோசிங்டனால் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரிகளில், இந்தியப் பொருட்கள் 50வீதம் வரையான கூடுதல் அமெரிக்க வரிகளை எதிர்கொள்கின்றன.
இதில் 25வீத வரி ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது.மீதமுள்ள 25வீத வரி ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வர்த்தக பேச்சு வார்த்தை
இந்தநிலையில் 2025 ஆகஸ்ட் 25-29 திகதிகளில் புதுடில்லிக்கு அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே வரிகள் குறைக்கப்படலாம் அல்லது ஒத்திவைக்கப்படலாம் என்ற நம்பிக்கையை இது தகர்த்தெறிந்துள்ளது.
இந்தநிலையில், பேச்சுவார்த்தைகளில் சில சிவப்பு கோடுகள் உள்ளன, எனவே பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் உரிமை
நாட்டின் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் நலன்களை இந்தியா முன்னிலைப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் தேசிய நலனுக்காக முடிவுகளை எடுப்பது இந்தியாவின் உரிமை என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




