இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையால் ஆபத்து -அருட்தந்தை ஜெகத் காஸ்பர்
சீனா தன்னுடைய அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பலை இந்தியாவுக்கு மிக அருகில் கொண்டுவந்து நிறுத்த முடியும் என்பது தான் இன்றைய யதார்த்தம் என அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் தெரிவித்துள்ளார்.
மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்றியுள்ளமை இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த வகையில் அச்சுறுத்தலாக அமையும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவுக்குத் தென்னிந்தியாவை இலக்கு வைக்கவோ இந்தியாவின் மையப்பகுதியை இலக்கு வைக்கவோ இனிமேல் எந்த சங்கடங்களும் இருக்காது.
ஏனெனில் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது அந்த துறைமுகத்தைச் சுற்றி பதினையாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சீனாவினுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல தலைநகர் கொழும்பிலே அறுநூற்று அறுபது ஏக்கர் நிலப்பரப்பு இலங்கையினுடைய இறையாண்மை இல்லாத சீனாவினுடைய இறையாண்மைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக மாறியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
