செம்பியன்ஸ் கிண்ணம் 2025: பாகிஸ்தானுக்கு செல்வது தொடர்பில் இந்தியா எடுத்துள்ள தீர்மானம்
இந்திய அணி செம்பியன்ஸ் கிண்ணம் 2025இல் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு செல்லாது என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்துக்கு அறிவித்துள்ளது.
இது பாகிஸ்தானிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு பின்னடைவான முடிவு என்று கிரிக்கட் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோசமான அரசியல் உறவின் காரணமாக, தமது கிரிக்கெட் அணிக்கு இந்திய அரசாங்கம், அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத நிலை
இந்திய அணியுடனான போட்டிகளை மாத்திரம் வேறு நாடுகளில் கலப்பு (Hybrid) முறையில் நடத்தமுடியும் என்ற போதிலும், அந்த யோசனையை பாகிஸ்தானிய கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி நிராகரித்துள்ளார்.
எனினும், தவிர்க்க முடியாத நிலையில் ஹைப்ரிட் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது இலங்கையில், இந்திய அணியுடனான போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |