இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் அணித்தலைவர் யார்..!
இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா(Rohith Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதை தொடர்ந்து புதிய அணித்தலைவர் யார் என்ற கேள்வியெழும்பியுள்ளது.
அடுத்து வரும் இங்கிலாந்து(England) டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய ஒரு அணித்தலைவரை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டெஸ்ட் அணித்தலைவர்
அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் அணித்தலைவராக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அடுத்த டெஸ்ட் தலைவராக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அடிக்கடி காயம் அடைவதால் அவரை அணித்தலைவராக நியமிப்பில் பிசிசிஐக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இதற்கிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணி
மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார்.
எனவே அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் அவரை அணித்தலைவராக்க பிசிசிஐ முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி ஹெடிங்லியில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.