இந்தியாவின் K-4 ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
இந்தியாவின் அணுசக்தித் திறனைப் பறைசாற்றும் வகையில், வங்கக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் அரிகாத் (INS Arighaat) என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து K-4 ரக ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அப்பால் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை விண்ணில் பாய்ந்தது.
அக்னி-III ஏவுகணை
அக்னி-III ஏவுகணையின் கடற்படைப் பதிப்பான இது, கடலுக்கடியில் இருந்து ஏவப்பட்டு நீரின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் ரொக்கெட் மோட்டார் மூலம் செயல்படும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

சுமார் 2.5 டன் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, எதிரிகளின் பார்வையில் படாமல் கடலுக்கடியில் நீண்ட காலம் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டது.
இந்த சோதனையின் மூலம் நிலம், நீர் மற்றும் ஆகாயம் ஆகிய மூன்று தளங்களிலிருந்தும் அணு ஆயுதங்களை ஏவும் 'அணுசக்தி முக்கோண' (Nuclear Triad) வலிமையை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக 'K' என பெயரிடல்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக 'K' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணைத் தொடர், இந்தியாவின் பாதுகாப்புத் தற்காப்புத் திட்டத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
கடந்த 2024 ஆகஸ்ட் இல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்ட இந்த ஏவுகணைத் தொழில்நுட்பம், தற்போது முழுமையான செயல்பாட்டுத் திறனைப் பெற்றுள்ளதைக் காட்டும் வகையில் இந்தச் சோதனை அமைந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri