இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது
இலங்கையின் பொருளாதார மீட்சியில் உறுதியான பங்காளியாக இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் யுனிஃபெய்ட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அமைப்பின் முன்கூட்டிய அறிமுகம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
அத்துடன், இந்திய ரூபாயின் வர்த்தக வளர்ச்சி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவை உயர்ஸ்தானிகர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri