இந்தியாவின் 101 வது செயற்கைக் கோள் திட்டம் தோல்வி
இந்தியாவின் ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று அதிகாலை 5.59 மணிக்கு இஸ்ரோவின் 101வது செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.சி.,61 விண்ணில் ஏவப்பட்டது.
எனினும் விண்வெளிக்கலனில்(Rocket) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக திட்டம் தோல்வி அடைந்தது.
செயற்கைக் கோள்
பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக சுமார் 1, 696 கிலோ எடை கொண்ட wos-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்திருந்தனர்.
இந்தநிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 விண்வெளிக்கலன் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தபட்டது.
எனினும் விண்வெளிக்கலனின் 3வது அடுக்கு பிரிந்த போது தொழில்நுட்ப பிரச்சிளை ஏற்பட்டது. இதனால் திட்டம் சோதனை அடைந்தது.
இந்தநிலையில், பி.எஸ்.எல்.வி.சி.61 விண்வெளிக்கலனில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டமை தொடர்பில், ஆய்வுக்கு பின் விரிவான தகவல் தெரிவிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
