கனமழை மற்றும் நிலச்சரிவால் தத்தளிக்கும் இந்தியா: டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் பெய்து வரும் கடுமையான மழையினால் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
இந்தியாவின் பல பகுதிகளில் சேதம்
இடிபாடுகளிலிருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான ஹரியானாவின் சில பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் பலத்த மழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனமழை காரணமாக டெல்லியின் பல வீதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் தங்களது பயண நேரத்தைத் திட்டமிட்டு முன்கூட்டியே புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களிலும் மழைக்கால விபத்துகள் அதிகரித்துள்ளன. கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பூனே நகரில் உள்ள கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் மாபெரும் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலர் சிக்கியுள்ளனர்.
அங்கிருந்து 7 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 9 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தவிர ஆக்ராவின் தெருக்களிலும், குஜராத்தின் நெடுஞ்சாலைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan