இந்தியாவில் எரிபொருள் விலை திடீர் குறைப்பு
பெற்றோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் பெற்றோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ஒரு ஒரு லட்சம் கோடி வருவாய் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் பெற்றோல் விலை லிட்டருக்கு 105.41 ரூபாவிலிருந்து 95.91 ரூபாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு 96.67 ரூபாவிலிருந்து 89.67 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை விட இந்தியாவில் பெற்றோல் மலிவாக விற்பனை செய்யப்படுவதாகவும், எனினும் சீனா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை விட விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க மாநிலம் மற்றும் மத்திய அரசு வரிகளைக் குறைக்க வேண்டும் என்பதற்கு வழிவகுத்தது.
எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan