உலகளவில் ஊக்க மருந்துக் குற்றச்சாட்டில் இந்தியாவிற்கு மோசமான இடம்
விளையாட்டுக்களில், உலகளவில் ஊக்க மருந்துக் குற்றச்சாட்டில், இந்தியா மோசமான முதல் இடத்தை கொண்டிருக்கிறது.
உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) வெளியிட்ட 2024 ஆண்டுக்கான அறிக்கையில், மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக இந்தியா உலகின் அதிக ஊக்க குற்றங்கள் கொண்ட நாடாக உள்ளது.
ஒலிம்பிக் போட்டி
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியாளர் ரீதிகா ஹூடா ஊக்க மருந்து சோதனையில் சிக்கி தற்காலிகமாக தடை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

2024 இல் உலக நாடுகளின் ஒப்பீட்டு அடிப்படையில், - இந்தியா – 260 - பிரான்ஸ் – 91 - இத்தாலி – 85 - ரஷ்யா – 76 - அமெரிக்கா – 76 என்ற எண்ணிக்கையில் ஊக்க மருத்து பாவனை இடம்பெற்றுள்ளது.
2030 பொது நலவாய போட்டிகளை நடத்தவும், 2036 ஒலிம்பிக் போட்டிக்காக முயற்சிக்கும் நிலையில், இந்த அறிக்கை இந்தியாவின் விளையாட்டு நம்பகத்தன்மைக்கு பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஊக்க மருந்து தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டு வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan