கொரோனா தடுப்பு ஊசி மருந்தை வழங்கி துறைமுகத்தை பெற இந்தியா அழுத்தம்!
இந்தியா, இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி மருந்தை வழங்கி அதற்கு பதிலாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கில் விமானத்தின் மூலம் பருப்பு வழங்கி,நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்த 13 வது அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர அழுத்தம் கொடுத்தது.
அதேபோல் 2021 ஆம் ஆண்டு விமானத்தில் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை அனுப்பி, அதற்கு ஈடாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பெற்றுக்கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் கையை முறுக்கியது போல், தற்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையை முறுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த சிரேஷ்ட அரசியல்வாதி கூறியுள்ளார்.