இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுப்பதாக சந்தோஷ் ஜா தெரிவிப்பு
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புனித தெவ்னிமோரி தாதுக்கள் தரிசனம்
அத்தோடு, இன்றைய தினம் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்த பெருமானின் புனித தெவ்னிமோரி தாதுக்கள் மக்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுவதன் மூலம் இந்த விசேட தினம் மேலும் சிறப்பிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அனுசரணையுடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும், புத்த பெருமானின் 'புனித தெவ்னிமோரி தாதுக்கள் தரிசனம் இன்று கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.