2025 செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து வெளியாகியுள்ள புதிய செய்தி
2025 செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள போட்டி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2025 செம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் (Pakistan) நடைபெற உள்ளது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என அறிவித்ததை, அடுத்து கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தற்போது இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எனினும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடக்க உள்ள சர்வதேச கிரிக்கெட் சபை நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும், அப்போது பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தையும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
விரைவில் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், 2025 செம்பியன் கிண்ண போட்டித் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, 2025 பெப்ரவரி 23ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான்
இந்தியா ஆடும் போட்டிகளை தவிர்த்து ஏனைய அணிகள் ஆடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, கராச்சி மற்றும் லாகூர் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.
இதேவேளை போட்டிகளில் இரண்டு குழுக்களாக நடத்தப்படும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |