ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா
இந்திய அரசாங்கத்தின் ஆண்டு இறுதி பொருளாதார மதிப்பாய்வின் கணக்கீடுகளின்படி, இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஜெர்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய பொருளாதார நாடாக
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது 4.18 டிரில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் 7.3 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தற்போதைய போக்குகளின்படி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பின்னால் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டில், அது அண்டை நாடான சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |