இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்! சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட உத்தரவு
ராஜஸ்தானை(Rajastan) ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர்.
இந்தியா தாக்குதல்
இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஒப்பரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது.
சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.
பதற்றமான சூழல்
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதேவேளை, காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri