உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கோபமடைந்த தந்தையால் மகனுக்கு நேர்ந்த சோகம்
இந்தியாவில் தந்தை ஒருவர் தொலைக்காட்சியை நிறுத்திய மகனை கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கொலை சம்பவம் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் - கான்பூரை சேர்ந்தவர் கணேஷ் பிரசாத் என்ற தந்தையே கொலையின் பிரதான சந்தேகநபர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோபமடைந்த தந்தை
மேலும் அந்த செய்தியில் , ''உலக கிண்ண இறுதிப்போட்டியை தந்தை, தனது வீட்டில் இருந்து பார்த்துள்ளார்.
இதன்போது, உணவு சமைத்துவிட்டு கிரிக்கெட்டை பார்க்குமாறு மகன், அவரது தந்தையிடம் கூறியுள்ளார். மேலும்,தொலைக்காட்சியை நிறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, கோபமடைந்த தந்தை, தொலைபேசி வடத்தல்(Telephone cord) கழுத்தை நெரித்ததன் காரணத்தினால் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதோடு கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |