இந்தியா - இலங்கைக்கிடையில் அமைக்கப்படும் திரவ எரிவாயு குழாய்
இலங்கையில் மின்சார கட்டணத்தை குறைக்க கொச்சியில் இருந்து கொழும்பு வரை திரவ
இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாக
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா தெரிவித்தார்.
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தையொட்டி, இந்தியா ஹவுஸில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2023 ஜூலை முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே தினசரி விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
அத்துடன் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளைத் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்தியா-இலங்கை இணைப்பு வழித்தடத்தை அமைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் இந்தியா பணியாற்றி வருவதாக தூதுவர் குறிப்பிட்டார்.
மின்சாரம் ஏற்றுமதி
இலங்கையின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா இருப்பதாகவும், அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும் இந்தியா இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவும் இலங்கையும் இயற்கையான பங்காளிகள் என்றும் அவை ஈடுசெய்ய முடியாதவை, இன்றியமையாதவை மற்றும் பிரிக்க முடியாதவை என்றும் ஜா குறிப்பிட்டார். இந்தநிலையில் பாதுகாப்பு உட்பட்ட விடயங்களில் இலங்கையின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக இந்திய தூதுவர் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு இலங்கையை இயலுமைப்படுத்த மின் கட்டண இணைப்பு செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அதேநேரம்; இலங்கையில் மின்சார செலவைக் குறைக்க கொச்சியில் இருந்து கொழும்பு வரை மெய்நிகர் எல்என்ஜி (LNG) குழாய்களை அமைப்பதற்கும் இந்தியா பணியாற்றி வருவதாக ஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச.பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
