ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தானை தண்டிக்க முயற்சிக்கும் இந்தியா!
எந்த ஆதாரமும் இல்லாமல், பாகிஸ்தானை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு தரப்புகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு சர்வதேச விசாரணை தேவை என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
மேலும் தமது நாடு சர்வதேச புலனாய்வாளர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஆய்வாளர்கள்
"சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும்" பாகிஸ்தான் "ஒத்துழைக்கத் தயாராக உள்ளது" என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானிய கூறுகள் இருப்பதாக இந்தியா கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான் தாக்குதலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பல நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
இந்திய நடவடிக்கை
இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது மற்றும் பாகிஸ்தான் தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் செல்ல தடை விதித்தது.
பயங்கரவாத தாக்குதலின் பின்னர் "நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தவும் உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காகவும்" இந்தியா இதனை சாக்குப்போக்காகப் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
"எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல்" பாகிஸ்தானை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
