உலக ஆதிக்க அரசியலில் முக்கிய இடத்தை தக்கவைக்கவுள்ள இந்தியா!
2050ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் உலகில் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசுகளாக உருவெடுக்கும் என்று முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேர் (Tony Blair) ஆரூடம் தெரிவித்துள்ளார்.
இதனால் புதிய "சிக்கலான உலக ஆட்சி" உருவாகும் எனவும், அதை உலகத் தலைவர்கள் வழிநடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மூன்று நாடுகளால் வடிவமைக்கப்பட்ட பன்முக உலகிற்கு ஏற்ப மற்ற நாடுகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈசல்கள் போல பாய்ந்து வந்த ஈரானின் ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகள்! திருப்பி அடிக்கத் தயராகும் இஸ்ரேல்!!
உலக மாற்றம்
உங்கள் நாடு உலகில் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும், அது பன்முக துருவமாக இருக்கப் போகும் ஒரு உலகமாக மாற்றம் பெரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, முன்னைய கூட்டுறவுகள் மற்றும் இராஜதந்திரத் திட்டங்களை மறுபரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
இதே நேரத்தில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான பிரச்சினையைப் பற்றி பேசும்போது, பெரிதும் விரிவடையும் போரின் அபாயம் இருக்கிறது என்றும் பிளேர் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |