இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து இந்தியா கவனம் செலுத்துகின்றது: எஸ் ஜெய்சங்கர்
இலங்கையில் நிலவரம் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்படுகின்றது எனவும் தேவையான இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் நிலவரம் மிகவும் உணர்வுபூர்வமானதும் குழப்பகரமானதுமாக காணப்படுகின்றது.
நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போதே நிலைமை மாறியவண்ணமுள்ளது, என குறிப்பிட்டுள்ளார்.
கடினமான நிலையில் இலங்கை
இலங்கை மக்கள் எங்கள் அயலவர்கள் என்பதால் நாங்கள் அவர்களிற்கு உதவுவதற்கான அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம், அவர்கள் மிகவும் நட்புணர்வு மிக்கவர்கள் அவர்கள் மிகவும் கடினமான நிலையில் உள்ளதால் நாங்கள் அவர்களிற்கு உதவ விரும்புகின்றோம்.
கடந்த சில மாதங்களாக அந்த நாட்டிற்கு நாங்கள் மிகுந்த ஆதரவாக இருந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் கவனம் இலங்கையின் பொருளாதார நிலை குறித்தும் எவ்வாறு உதவலாம் என்பது குறித்துமே காணப்படுகின்றது.
நாங்கள் ஏனைய விடயங்களில் ஈடுபடவில்லை, நாங்கள் பொருளாதார விடயங்கள் குறித்து மாத்திரமே கவனம் செலுத்துகின்றோம் ஏனைய விடயங்கள் குறித்து கரிசனை கொள்ளவில்லை, சமூக ஊடகங்களில் வெளியாகும் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிக்கமுடியாது எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய! |