சீனாவிடமிருந்து இலங்கையை மீட்கும் முயற்சியில் இந்தியா! இந்திய ஊடகம் தகவல்
சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள சாய்வு போக்குக்கு மத்தியில், இலங்கையை மீட்க இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை அதற்கான வழிகளை சீர் செய்யுமா ? என்று இந்திய செய்தி இணையம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில் இயற்கை பசளைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை நாட்டின் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக சீனாவில் இருந்து பசளைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் முன்வந்தது. எனினும் குறித்த பசளைகளில் மாதிரியில் தொற்று இருப்பதாகக் கூறி, இலங்கையின் அதிகாரிகள் அதனை நிராகரித்திருந்தனர்.
இதனையடுத்து மற்றும் ஒரு பசளைக்கப்பல் இலங்கைக்கு வரவிருந்த நிலையில் அதற்கும் இலங்கை தடை விதித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து நனோ நைட்ரிஜன் உரத்தை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. அத்துடன் நாட்டுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய இந்தியாவில் இருந்து இலங்கை கடன் பெறும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இந்தியாவுடன் இலங்கை மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் சீனாவை எரிச்சலடையச் செய்துள்ளது.
இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் தமது நாட்டில் இருந்து இறக்குமதி
செய்யப்படவிருந்த சேதனப்பசளைகளில் தொற்று இருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருந்தமையை மறுத்து அறிக்கை வெளியிட்டமையை இந்த விடயத்தில் இந்திய
செய்தி இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri