மீண்டும் இலங்கைக்கு உதவிய இந்தியா
சிறப்பு எற்பாட்டின்படி, இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி நிவாரணத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்பு பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ் இ;ந்த நிதி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடி
ஏற்கனவே இந்தியா, இலங்கைக்கு 4 பில்லியன் வரையான நிதியை வழங்கியுள்ளது.
அதில், 2024ஆம் ஆண்டுடன் முதிர்ச்சியடையும் 2.6 பில்லியன் சிறப்பு பரிமாற்றத்திட்டமும் அடங்கும் இதன் ஒரு பகுதியாகவே 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பொருளாதார நெருக்கடி காலத்தில் இருந்து, இந்தியா, இலங்கைக்கு 800 மில்லியன் ரூபாய் மானியங்கள் உட்பட்ட 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |