இலங்கையில் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த இந்தியா உதவி
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உதவிகளை வழங்கவுள்ளது.
இந்திய முயற்சியான்மையாளர்கள் இலங்கையில் காணப்படும் மதவழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
இலங்கையின் மதவழிபாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவே இந்திய முயற்சியான்மையாளர்கள் உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாத்துறை மேம்பாடு
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், இந்திய முயற்சியான்மையாளர்ளுக்கும் இடையில் இன்று (31.01.2023) அரச நிர்வாக அமைச்சில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இராவணாஎலிய, நுவரெலியா, சீதாஎலிய உள்ளிட்ட இராமாயணத்தில் கூறப்பட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கும், பக்தர்களை அழைத்து வருவதற்கும் தேவையான முதலீடுகளை செய்ய இந்திய முயற்சியான்மையாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
