இலங்கையின் கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்காத இந்தியா
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படவுள்ள புதிய யோசனைக்கு எதிராக ஆதரவு வழங்குமாறு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கோரி, ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
எனினும் அந்த கடிதத்திற்கு இந்தியா இதுவரையில் பதிலளிக்கவில்லை என அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே ஜெனிவா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் கியூபா, சீனா, ரஷ்யா, நேபாளம், வெனிசூலா ஆகிய நாடுகள் இலங்கை ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்படத் தமிழக அரசியல் கட்சிகள் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.