இலங்கையின் அவசர கடிதத்திற்கு இன்னமும் பதிலளிக்காத இந்தியா
ஐக்கியநாடு மனித உரிமை பேரவை அமர்வில் இந்தியாவின் ஆதரவை கோரி இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கு புதுடில்லி இன்னமும் உத்தியோகபூர்வமான பதிலை வழங்கவில்லை.
மனித உரிமை பேரவை அமர்வில் இந்தியாவின் ஆதரவை கோரி இலங்கை பிரதமர் நரேந்திரமோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஜெனீவா அமர்வில் இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என மோடியிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் அறிவிக்கவில்லை என கொலம்பகே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இந்தியா சாதகமான விதத்தில் பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
